கும்மிடிப்பூண்டி, ஜூன் 12: கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் மெட்ரிக் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி தீத்தடுப்பு ஒத்திகையை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் டாக்டர் பழனி, கல்வி குழும இயக்குனர் தமிழரசன், முதல்வர் ஞானபிரகாசம், துணை முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.