தா.பேட்டை, ஜூன் 11: தா.பேட்டை அருகே செவந்தாம்பட்டி மகா மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கம்பம் பாலித்து, சக்தி அழைத்து, காப்பு கட்டுதல், கரகம் பாலித்தல், மாவிளக்கு, பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தேரில் எழுந்தருளி மகா மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.நிறைவாக மஞ்சள் நீராடுதல், சுவாமி கம்பம் குடிவிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
