காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு சூறாவளி காற்றால் கடல் சீற்றம் 4,000 நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

சேதுபாவாசத்திரம், ஜூன் 11: சேதுபாவாசத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் 4,000 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உட்பட 32க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4,000 பாய்மர படகு, பைபர் கிளாஸ் படகு, கட்டுமரங்கள் உள்ளன, இவை அனைத்தும் விசைப்படகு செல்லக்கூடிய திங்கள், புதன், சனிக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வர், ஆனால் தற்போது விசைப்படகுக்கு மீன்பிடி தடைகாலம் என்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் தடையின்றி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாக உள்ளது. மேலும் கடல் அலை 4 அடி முதல் 6 அடி உயரத்திற்கு வருகிறது. இதனால் வழக்கமாக கடலுக்கு செல்ல வேண்டிய 4,000 நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மேலும் 4,000 நாட்டுப்படகு மீனவர்கள், தங்கள் படகுகளை அந்தந்ந கிராமங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Related Stories: