உத்திரமேரூர், ஜூன் 11: உத்திரமேரூர் கிளை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த அ.பி. சத்திரம் கிராமத்தில் உத்திரமேரூர் கிளை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நேற்று நடந்தது. வட்டார தலைவர் வைலட் இருதய மேரி தலைமை தாங்கினார்.