பாரை சுற்றி மழை நீர் தேக்கம் க.பரமத்தி கடைவீதி 4 சாலை சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்கப்படுமா?

க.பரமத்தி, ஜூன் 7: கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதியில் நான்கு சாலையில் ஒரே இடத்தில் சந்திப்பதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தானியங்கி சிக்னல் லைட் அமைத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி கடைவீதி அமைந்துள்ளது. இப்பகுதி 5க்கும் மேற்பட்ட ஊராட்சியினை சேர்ந்த பொதுமக்கள் சந்திக்கும் முக்கிய கடைவீயாக உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேசன், வாரச்சந்தை, போஸ்ட் ஆபீஸ், பஞ்சாயத்து அலுவலம், விஏஓ அலுவலகம், ஆர்.ஐ அலுவலகம், மளிகை கடைகள், டீ மற்றும் ஓட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்கள் உள்ளன.அலுவலகம் மற்றும் கடைகளில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள க.பரமத்தி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் பல்வேறு பணி நிமித்தமாக க.பரமத்தி நான்கு வழி சந்திப்பில் கூடுகின்றனர்.

அதற்கு ஆரியூர் மற்றும் சின்னதாராபுரம் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், நொய்யல் வழியிலிருந்து க.பரமத்திக்கு வரும் வாகன ஓட்டிகளும் கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான ஜல்லி மற்றும் மணல் லாரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புகின்றன.

இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கிறது. எனவே போக்குவரத்து நெரிசல் அடிக்கடி உண்டாவதால் விபத்துகள் நடக்கிறது. எனவே போக்குவரத்தை ஒழுங்கு படுத்திட போலீசார் க.பரமத்தி கடைவீதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும். இதனால் எதிர்புறமாக வரக் கூடிய வாகனங்கள் ஒழுங்கு படுத்தி சென்றிட வழி வகையாக அமையும்.

எனவே கடைவீதியில் நான்கு வழி சந்திப்பில் தானியங்கி சிக்னல் விளக்கு அமைத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: