வீட்டு வேலைக்கு சென்ற பெண் மாயம் கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர் சாலை மறியல் செய்யாறில் பரபரப்பு

செய்யாறு, ஜூன் 5: செய்யாறிலிருந்து பெங்களூருக்கு வீட்டு வேலைக்காக சென்ற பெண் மாயமானதை தொடர்ந்து ஆவரது குடும்பத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

செய்யாறு டவுன் கண்ணுகாபுரம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் மனைவி வர்த்தம்மாள்(55), இவர் செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் கிறித்துவசபை மூலம் கிருத்துவ மதத்திற்கு மதம் மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வர்த்தம்மாள் கிறிஸ்தவ சபை மூலம் வீட்டு வேலைக்காக பெங்களூருக்கு சென்றதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவரை தொடர்பு கொண்டால் எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். மேலும், கிறித்தவ சபையில் விசாரித்தபோது உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், வரத்தம்மாளின் மகன் முருகன், மருமகள் சீதா, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோர் செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் உள்ள கிறித்துவ சபை எதிரே நேற்று மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் மறிலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு சுமார் அடை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: