சித்தூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்து யானைக்கூட்டம் அட்டகாசம் தக்காளி, மா செடிகள் சேதம்

காளஹஸ்தி, மே 30: சித்தூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்து யானைக்கூட்டம் அட்டகாசம் செய்ததில் தக்காளி, மா செடிகள் சேதமடைந்தது. சித்தூர் மாவட்டம், யாதமரி மண்டலத்தில் நேற்றுமுன்தினம் இரவு புகுந்த யானைக்கூட்டம் அதே பகுதியை சேர்ந்த நாகராஜு என்ற விவசாயிக்கு சொந்தமான தக்காளி பயிர், முகிலப்பா, கண்ணம்மா, ஜமுனா ஆகிய 3 விவசாயிகளுக்கு சொந்தமான மா செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. மேலும் விவசாய நிலத்தில் அறுவடை செய்த தக்காளியையும் சேதப்படுத்தியது. தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி ஹரி மற்றும் வனத்துறையினர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர். தொடர்ந்து இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் விவசாயிகள் தனியாக இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். யானைக்கூட்டம் அட்டகாசத்தால் நாகராஜுக்கு சொந்தமான தக்காளி பயிர் சேதமடைந்ததில் ₹50 ஆயிரத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அரசிடமிருந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Stories: