கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

மணப்பாறை,  மே 22:  மணப்பாறையில்  முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

மணப்பாறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக கடந்த  28 ஆண்டுகளாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: