பந்தலூர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் பராமரிக்க வலியுறுத்தல்

பந்தலூர், மே 22 : கூடலூர், பந்தலூர் வட்டத்தில் செயல்படும் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்பம் சுகாதார நிலையங்களில் பத்து, 108 அரசு ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இதில் பந்தலூர் அரசு மருத்துவமனையில் ஒரு 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் உதகை, கோவை போன்ற தொலைதூரமுள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்கிறது. மீண்டும் திரும்பி வர பல மணி நேரம் ஆவதால் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

மேலும் மலைப்பகுதியில் இயங்கும் ஆம்புலன்ஸ் உரிய முறையில் பராமரிக்காமல் இருப்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் டயர் சரியில்லாததால் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் தப்பினர். தற்போது பந்தலூர் 108 ஆம்புலன்ஸ் எப்சி செய்யப்பட்டுள்ளது.

முறையாக பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதா என கண்காணிக்காமல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மலைப்பகுதியில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களை உரியமுறையில் போக்குவரத்து ஆய்வாளர் கண்காணித்து அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: