குட்டிநாய்கள், கோழிகளை கடித்து குதறி கொன்றது கல்லுக்குழியில் வெறிநாய் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்

திருச்சி, மே 21: திருச்சி கல்லுக்குழி அருகே வெறிநாய் ஒன்று அப்பகுதியில் உள்ள நாய்குட்டிகள், ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை கடித்து துவம்சம் செய்தது. இதில் கல்லுக்குழி கள்ளர் தெரு மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய பகுதிகளில் உள்ள நாய் குட்டிகளை கடித்து குதறி வீசி சென்றது. இதில் ரத்தம் வடிய, வடிய உயிருக்கு போராடிய நாய்குட்டிகள் அலறியது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று இரவு கல்லுக்குழி கள்ளர் தெரு மற்றும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய பகுதிகளில் இருந்த நாய்குட்டிகளை கடித்து குதறிய வெறி நாய் அங்கிருந்து தப்பி சென்றது. தடுக்க சென்ற பொதுமக்களை வெறியுடன் பார்த்து கடிக்க வந்ததால் அவரவர் வீடுகளை பூட்டி கொண்டனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி இளைஞர்கள் உருட்டு கட்டைகளுடன் வெறி நாயை தேடினர். இரவு முழுவதும் தேடியும் வெறி நாய் சிக்கவில்லை. இதில் வெறி நாய் கடித்து குதறியதில் நாய் குட்டிகள் பரிதாபமாக இறந்தது. ஆனாலும் அப்பகுதியில் மறைந்துள்ள வெறிநாயை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் குழந்தைகள் ஏராளமானோர் உள்ளதால் அவர்களை வெறி நாய் கடித்துவிடாமல் பாதுகாக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று மாநகரில் அதிகளவில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து காட்டு பகுதிகளில் விடவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: