தேனியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தேனி, மே 16: தேனியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி  துவங்கியது. வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் ஆண்டுதோறும், பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இதன்படி, இந்தாண்டு தணிக்கை பணி நேற்று துவங்கியது. வரும் 25ம் தேதி வரை இந்த பணி நடக்க உள்ளது. ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் பல்லவிபல்தேவ் துவக்கி வைத்தார். ஆய்வின்போது, வாகனத்தின் நிறம், பள்ளி குறித்த விபரம், தொடர்பு எண்கள், பிரேக் திறன் கதவுகள் இயக்க நிலை, இருக்கைகள், படிக்கட்டுகள், வாகன ஓட்டுனரின் இருக்கை, முதலுதவிப்பெட்டி, தீயணைப்புக் கருவி, வேகக் கட்டுப்பாட்டுக்கருவி ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆய்வின்போது, போலீஸ் எஸ்பி பாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வம், செந்தில்குமார், முகமதுமீரா உள்ளிட்டோர் இருந்தனர்.

Related Stories: