அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்

மதுரை, மே 15:  மதுரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் 45வது உலக செவிலியர் தினவிழா கொண்டாடப்பட்டது. ெசவிலியர் விடுதி முன் உள்ள நைட்டிங்கேர்ள் அம்மையாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ெசய்தனர். பின்னர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.  முதல்நிலை செவிலிய கண்காணிப்பாளர் நாகரெத்தினம் தலைமை வகித்தார். இரண்டாம் நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மா, சரோஜினி, சுசிலா, உஷா, தமிழ்நாடு நர்ஸ்சஸ் அசோசியேசன் மாவட்ட தலைவர் சுலோக்சனா, செயலாளர் இந்திராணி, துணைத் தலைவர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இங்குள்ள செவிலியர் பள்ளி சார்பிலும் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு நைட்டிங் கேர்ள் அம்மையார் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், அனைத்து தரப்பு செவிலியர்களும் இன்று முதல் புதிய சீருடையில் பணிகின்றனர். நைட்டிங் கேர்ள் அம்மையாரின் நினைவு நாளான மே 12ம் தேதி முதல்,  செவிலியர்கள் புதிய சீருடையில் பணிபுரிய முடிவு செய்திருந்தனர். ஆனால் மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிய சீருடை வர தாமதம் ஏற்பட்டதால், இன்று முதல் புதிய சீருடையில் செவிலியர்கள் பணிபுரிகின்றனர். முதல் நிலை செவிலிய கண்காணிப்பாளர்களுக்கு பிஸ்தா கிரீன் கலர், இரண்டாம் நிலை செவிலிய கண்காணிப்பாளர்களுக்கு ரோஸ் வெள்ளை கலரிலும் சீருடை தேர்வு செய்யப்பட்டுள்ளது. செவிலியர்கள் அனைவருக்கும் சேலை, கோட் என புதிய சீருடை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: