கலியாவூரில் திமுக வேட்பாளர் சண்முகையா பிரசாரம்

ஓட்டப்பிடாரம், மே 15: கலியாவூரில் திமுக வேட்பாளர் சண்முகையா வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.திமுக வேட்பாளர் சண்முகையா நேற்று முன்தினம் கலியாவூர் ஊராட்சியில் வாக்கு சேகரிக்க வந்தார். அவருக்கு கலியாவூர் ஊராட்சி தேர்தல் பொறுப்பாளரும், பாளை ஒன்றிய திமுக செயலாளருமான கே.எஸ்.தங்கப்பாண்டியன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் மகராசன், நெல்லை தூத்துக்குடி  மாவட்ட முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவர் போர்வெல் கணேசன், களக்காடு கருணாகரன்,பாளை ஒன்றிய முன்னாள்  சேர்மன் கனகராஜ், துணை சேர்மன் வேலங்குளம் முருகன், குருநாதன், கலியாவூர் ஊராட்சி செயலாளர் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்கனி, செந்தூர் பாண்டியன், மாசானமுத்து, உதயசூரியன், பாளை அருணாச்சலம், செல்வசங்கர், சுரேஷ், முத்துக்குமார், பாலசுப்பிரமணியன், இசக்கிபாண்டி, சப்பாணி, ராஜா, வேல்துரை, சண்முகவேலு, மாரிச்சாமி மற்றும் ஏராளமான நிர்வாகிகளும்  பொதுமக்களும்  கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.வேட்பாளர் வருகையை அடுத்து கலியாவூரை பூர்வீகமாக கொண்ட டாக்டர் இப்ராகிம்ஷா, கலியாவூர் வந்து ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்டினார்.

Advertising
Advertising

Related Stories: