ண்டும், குழியுமாக காட்சியளித்த குலசை இசிஆர் சாலை சீரமைப்பு

குஉடன்குடி, மே 22: குண்டும், குழியுமாக காட்சியளித்த குலசை, மணப்பாடு இசிஆர் சாலை, தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதிகளில் பெரும் பள்ளங்கள் ஆங்காங்கே காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்ததுடன், இருசக்கர வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆன்மீக, சுற்றுலாத்தலமான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, உவரி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், இச்சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து கடந்த 16ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினம், மணப்பாட்டில் இருந்து அமராபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை(இசிஆர்) பகுதியில் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டு புதிதாக சாலை போடப்பட்டு உள்ளது. இதையடுத்து இசிஆர் சாலையின் நிலை குறித்து செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகளும், இப்பகுதி மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post ண்டும், குழியுமாக காட்சியளித்த குலசை இசிஆர் சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: