பண்டாரவாடையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

பாபநாசம், மே 15: பண்டாரவாடையில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் அடுத்த பண்டாரவாடை சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊராகும். இந்த ஊரை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியில் உள்ளனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் உள்ள இந்த ஊரில் உள்ள 2 பேருந்து நிழற்குடைகளில் உட்கார நாற்காலியின்றி பயணிகள் நின்றப்படியே உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பேருந்து நிழற்குடையில் இருந்த உட்காரும் பலகைகள் உடைந்து விட்டது. இதனால் பேருந்து நிழற்குடையில் உட்கார முடியாமல் வயதானவர்கள், கர்ப்பிணிகள் கூட நிற்க வேண்டியுள்ளது. இந்த ஊரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் வெளி இடங்களிலிருந்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் பாபநாசம், கும்பகோணம் செல்ல இந்த பேருந்து நிழற்குடைகளில் தான் நிற்க வேண்டியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், இந்த பேருந்து நிழற்குடையை சீரமைத்து உட்கார வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Advertising
Advertising

Related Stories: