அதிரையின் கூவமாக மாறி வரும் யானை விழுந்தான் கோயில் குளம் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

அதிராம்பட்டினம், மே 15: அதிராம்பட்டினத்தின் கூவமாக யானை விழுந்தான் குளம் மாறி வருகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிராம்பட்டினம் பெருமாள் கோயில் அருகில் குளம் உள்ளது. இந்த குளத்தை யானை விழுந்தான் குளம் என்று அழைப்பர். இந்த குளம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. பல நூற்றாண்டுகளாக குளம் பரமரிக்கமால் வெங்காய தாமரைகள் மற்றும் பல்வேறு செடி, கொடிகள் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. அதோடு குளக்கரையில் கோழி கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

Advertising
Advertising

குளக்கரையில் குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் ஏற்பட்டும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருவதுடன் நோய்கள் பரவும் அபாயத்தில் உள்ளனர். இந்த குளம் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை.

அதிராம்பட்டினம் பகுதியில் குளங்களில் தண்ணீர் வற்றியுள்ள நிலையில் இந்த குளத்தில் தண்ணீர் இருந்தும் பயன்பாடின்றி உள்ளது. பெருமாள் கோயிலுக்கு அருகில் உள்ள கோயில் குளம் இதுபோன்ற அவலநிலையில் உள்ளது. இந்த குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே யானை விழுந்தான் குளத்தை விரைந்து தூர்வாரி சீரமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: