நீடாமங்கலம் அருகில் கண்ணம்பாடியில் பாலம் கட்டும் பணி துவக்கம்

நீடாமங்கலம், மே 14: தினகரன் செய்தி எதிரொலியாக நீடாமங்கலம் அருகில் கண்ணம்பாடியில் பாலம் கட்டும் பணி துவங்கியது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரகில் உள்ளது கண்ணம்பாடி பாலம். இந்த பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆபத்தான நிலையில் மோசமாக உள்ளது. பாலம் வழியாக முல்லைவாசல், பெரம்பூர், ரிஷியூர், வரதராஜபெருமாள் கட்டளை, கட்டையடி, கானூர், ராஜப்பையன்சாவடி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள்  பாலம் வழியாக மன்னார்குடி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். மாணவ மாணவிகள் மிகவும் அச்சத்துடன்  செல்கின்றனர். இந்நிலையில் பாலத்தில் இருபுறமும் உள்ள கட்டைகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது என கடந்த ஆண்டும், கடந்த பிப்ரவரி 19ம் தேதியும் ஆபத்தான கண்ணம்பாடி பாலத்தை புதிப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையில் பேரில்  தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி  எதிரொலியால் தற்போது பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பணியை தொடங்கிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் பாலத்தை திடமாகவும், உறுதியாகவும் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: