அரவக்குறிச்சி அருகே வெறிநாய் கடித்து 4 ஆடுகள் பலி

அரவக்குறிச்சி, 14: அரவக்குறிச்சி அடுத்த ஈசநத்தம்- ஆலமரத்துப்பட்டியில் வெறி நாய்கள் கடித்து  விவசாயிகளின் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது. அரவக்குறிச்சி பகுதி வானம் பார்த்த பூமியாகும். அரவக்குறிச்சி ஒன்றியத்தில் ஈசநத்தம், அம்மா பட்டி, ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம்பள்ளி, வென்ஜ மாங்கூடலூர், புங்கம்பாடி உள்ளிட்ட 20 ஊராட்சிகளிலும் மழையை நம்பி விவசாயம் செய்தது போக ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பட்டியமைத்து ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெறி நாய்கள் ஆடுகளை வேட்டையாடி வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு ஈசநத்தம் ஆலமரத்துப்பட்டியில் தோட்டத்தில் ஆடு வளர்த்து வரும் ராமசாமி மகன் ஆண்டிவேல் தோட்டத்தில் பட்டிக்குள் அடைக்கப்பட்டுள்ள செம்மறி ஆடுகளை வெறிநாய்கள் கடித்ததில் நான்கு ஆடுகள் பலியாயின.  இது பற்றி அப்பகுதி ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:  சரியான மழை இல்லாததால் விவசாயம் இல்லாமல் ஆடு வளர்த்து ஜீவனம் செய்து வருகின்றோம். தற்போது வெறிநாய்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. பட்டிகளில் புகுந்து ஆடுகளை கடித்து குதறி விடுகின்றது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது.

இந்த வாரத்தில் மட்டும் 10க்கு மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்கள் கடித்து பலியாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சியின் கவனத்திற்கும், கால்நடைமருத்துவதுறைக்கும் எடுத்து சென்றும் எந்தவித பயனும் இல்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம் என்றனர்.

Related Stories: