மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை மறுப்பு கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேச்சு

சென்னை:தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி மத்திய தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதாவது:   மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தலித் கிறிஸ்தவர்கள் பட்டியலிடப்பட வேண்டும். இதற்காக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 ஏக்கரில் ஒரு கல்லறைத் தோட்டம் உருவாக்கித் தர வேண்டும். கிறிஸ்தவர்கள் ஆலயம் கட்டவும், இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் கட்டவும் தற்போது உரிய காரணங்கள் இன்றி அனுமதி தரப்படுவதில்லை. அரசு இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்….

The post மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை மறுப்பு கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: