கடைகளிள் திடீர் சோதனை 1,700 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

திருப்பூர், மே 10: திருப்பூரில் மாநகராட்சி அலுவலர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 1,700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழகத்தில் பிளாஸ்டிக் கவர், டம்ளர், தட்டு, ஸ்பூன் உள்ளிட்ட ஒருதடவை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருப்பூரில் சில பகுதிகளில் இவை ரகசியமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வது நடந்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த புகாரின் பேரில், மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் குழு கடந்த இரண்டு நாட்களாக அரிசி கடை வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, மங்கலம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் ரகசிய அறை அமைத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டம்ளர் உள்ளிட்டவை மூட்டைகளிலும், அட்டை பெட்டிகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து 1,700 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

Related Stories: