சின்னஇலந்தைகுளத்தில் மார்நாடு கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர், மே 7:மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் உள்ள அக்கினிவீரன், மார்நாடு கருப்புசாமி, லாடசன்னாசி, சீலைக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல் இரண்டு நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தது. மூன்றாவது நாள் காலையில் மேள, தாளம் முழங்க அழகர்மலை, வைகை, கங்கை, காவிரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் யாகசாலையிலிருந்து எடுத்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க குடம் குடமாக கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

    அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. சுற்று வட்டாரங்களிலிருந்தும் வெளிமாவட்ட பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து கும்பாபிஷேக விழாவில் தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories: