மணல்லாரிகள் அடிக்கடி செல்வதால் தாண்டவன்குளம் கூழையார் கிராம சாலை படுமோசம் சீரமைக்க கோரிக்கை

கொள்ளிடம், மே 3: கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து கூழையாறு செல்லும் கிராம சாலை கற்கள் பெயர்ந்து படுமோசமாக உள்ளதால் மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவடட்ம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்திலிருந்து இருவக்கொல்லை, மகாராஜபுரம், வேட்டங்குடி கேவரோடை, வாடி, வேம்படி ஆகிய கிராமங்கள் வழியாக கூழையாறு கடலோர கிராமத்துக்குச் செல்லும் கிராமச்சாலை ண்டவன்குளத்திலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்துக்கு  சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அப்பகுதியில் அனுமதியின்றி சவுடுமண் கடத்தி வரும் லாரிகள் கிராமச்சாலை வழியாக சென்று கொண்டிருப்பதால், சாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களும், சைக்கிள்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் சாலையில் செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனர்.

மேலும் சைக்கிள் டயர், ஜல்லிகளால் கிழிக்கப்பட்டு பஞ்சர் ஆகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தாண்டவன்குளத்திலிருந்து கூழையாறு செல்லும் சாலையை மேம்படுத்தவும், அனுமதியின்றி சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

Related Stories: