ஆசிய தடகள போட்டியில் தங்க பதக்கம் வென்ற கோமதிக்கு துணை ஆட்சியர் பதவி வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை

தஞ்சை,  ஏப். 30: ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் வாங்கி தந்த  கோமதிக்கு அரசின் சார்பில் துணை ஆட்சியர் பதவி வழங்க வேண்டுமென  விளிம்புநிலை மக்கள் விழிப்புணர்வு இயக்கம் மனு அனுப்பியுள்ளது. தமிழக  அரசுக்கு ளிம்புநிலை மக்கள் விழிப்புணர்வு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்  முத்துமாரியப்பன் கோரிக்கை மனு அனுப்பினார். அதில் கத்தார் தலைநகர்  தோஹாவில் நடந்து வரும் ஆசிய தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில்  தமிழ்நாட்டை சேர்ந்த திருச்சி மாவட்டம் முடிகண்டம் கிராமத்தை சேர்ந்த கோமதி  மாரிமுத்து 800 மீட்டர் தடகள ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு  முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார். நமது நாட்டை உலகின் பார்வைக்கு  கொண்டு சென்றும் தமிழகத்தை உலகின் உன்னதமான இடத்துக்கும் எடுத்து  சென்றுள்ளார்.

ஒரு கிராமத்தில் பிறந்து உலகின் ஒப்பற்ற போட்டியான தடகள  போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் பெற்று தந்தவருக்கு தமிழக அரசு  குறைந்தபட்சம் ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும். அவரது விளையாட்டை  ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் கொண்டு தொடர் பயிற்சி  அளிக்க வேண்டும். மேலும் கோமதி மாரிமுத்துவை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக  அரசின் சார்பில் துணை ஆட்சியர் பதவி வழங்க வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: