பானி புயல் பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஏப்.28: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். எஸ்.பி. பண்டிகங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

தமிழகத்திற்கு வரும் 29, 30 மற்றும் மே 1ம் தேதிகளில் மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும், மாவட்ட எஸ்.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு எண்.04343-230100 என்ற எண்ணிற்கும், தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அலுவலக எண். 04343-236101 மற்றும் செல் போன் எண். 9445086360 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, அங்குள்ள மக்களை அருகில் உள்ள பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைத்து, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் தொண்டு நிறுவனங்கள், ரெட்கிராஸ் சொசைட்டி, நேரு யுவகேந்திரா ஆகிய தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு களப்பணிக்கு ஈடுபடுத்திக்கொள்வதோடு, அவர்களது தொடர்பு எண்ணையும், அரசுத்துறை அலுவலர்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: