எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை

 

ராயக்கோட்டை, மே 26: ராயக்கோட்டை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராயக்கோட்டையில் மலர்கள், காய்கறிகள், தானியங்கள் அதிகளவில் விளைச்சலாவதால், இது வணிக மையமாக உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு நகர்களுக்கும், கேரளா மற்றும் புதுச்சேரிக்கும் விளை பொருட்கள் அனுப்பப்படுகிறது.

அதை லாரிகள் மூலமாக எடுத்துச் செல்வதால் 2 மடங்கு விலை அதிகரிக்கிறது. அதையே ரயில் மூலம் எடுத்துச்சென்றால் விலை பெருமளவிற்கு குறையும். இங்குள்ள தொழிலாளர்கள் பெங்களூரு வரை வேலைக்குச் சென்று வருகின்றனர். இவ்வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தர்மபுரியில் புறப்பட்டால், இடையில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை ரயில் நிலையங்களில் நிற்காமல், ஓசூரில் நின்று பெங்களூரூ சென்றுவிடுகிறது.

ராயக்கோட்டை ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்றால், தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வரவும், விவசாய உற்பத்தி பொருட்களை எடுத்து செல்லவும் பயனுள்ளதாக அமையும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: