பிளஸ்2 பொதுத்தேர்வில் திருவேங்கடம் கலைவாணி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

திருவேங்கடம், ஏப். 26:   திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்2 பொதுத்தேர்வை 139 மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் அபிஷேக்பாலன் 600க்கு 569 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றுள்ளார். மாணவி ராஜலட்சுமி 600க்கு 559 மதிப்பெண்களும், மாணவர் முத்துக்குமரன் 600க்கு 555 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். கம்ப்யூட்டர் பாடத்தில் அபிஷேக்பாலன் 100க்கு 100 மதிப்பெண்ணும், அக்கவுண்டன்சி பாடத்தில் மாணவி சங்கீதா 100க்கு 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

550 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 500க்கு மேல் 26 மாணவர்களும், 450க்கு மேல் 61 மாணவர்களும், 400க்கு மேல் 104 மாணவர்களும் பெற்றுள்ளனர். 123 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழில் 100க்கு 98, ஆங்கிலம் 100க்கு 97, கணிதம் 100க்கு 97, இயற்பியல் 100க்கு 95, வேதியியல் 100க்கு 97, உயிரியல் 100க்கு 91, கம்ப்யூட்டர் 100க்கு 100, அக்கவுண்டன்சி 100க்கு 100, காமர்ஸ் 100க்கு 97, பொருளாதாரம் பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகி பொன்னழகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: