கூத்தாநல்லூர் மரக்கடை வடுவழகி அம்மன் கோயில் தேர் திருவிழா

கூத்தாநல்லூர், ஏப். 26: கூத்தாநல்லூர் அருகே உள்ள மரக்கடை வடுவழகி அம்மன் கோயில் 95வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கூத்தாநல்லூர் அருகே  மரக்கடையில் அமைந்துள்ள வடுவழகி அம்மன் கோயில் 95வது ஆண்டு உற்சவர் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. 23ம் தேதி பக்தர்களுக்கு கஞ்சி வார்ப்புடன் தொடங்கிய இந்த  விழாவில் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கலைக்குழுவினரின் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. பக்தர்களால் வடம்பிடிக்கப்பட்டு நகர்ந்த தேர் திருவாரூர்-மன்னை சாலை பிரதான சாலை,  வடக்கு மற்றும் தெற்குத்தெரு வழியாக வீதியுலாவாக சென்று பின்னர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.  தேரில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடுவழகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து நேற்று மாலை மதில் எடுக்கும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து தேரோட்ட வீதியுலாவும் நடைபெற்றது. 26ம் தேதியான இன்று விடையாற்றி விழா மண்டகப்படியும் நடைபெறுகிறது.

Related Stories: