தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி

சுரண்டை, ஏப். 25:  சுரண்டை சிவகுருநாதபுரத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (52). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் இவரது மனைவி, 3 மகன்கள், ஒரு மகள் ஆகியோர் 75 சதவிகிதம் தீக்காயமடைந்து பாதிக்கப்பட்டனர். இவர்களது வீடு முற்றிலும் எரிந்த நிலையில், குடியிருக்க வீடின்றி அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் எஸ்.வேலாயுத நாடார் கோமதி அம்மாள் அறக்கட்டளை மற்றும் சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்.வேலாயுத நாடார் கோமதி அம்மாள் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை வகித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். சங்க தலைவர் பன்னீர், துணை தலைவர்கள் ரத்தினம், அண்ணாமலை கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ராமர் வரவேற்றார். இதில் சங்க நிர்வாகிகள் முருகன், சங்கர், ரவிக்குமார், ஜவகர் தங்கம், காண்ட்ராக்டர் சமுத்திரம், கண்ணன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: