முப்பிடாதி அம்மன் கோயில் கொடை விழா நன்னகரத்தில் முளைப்பாரி ஊர்வலம்

தென்காசி, ஏப். 25:   நன்னகரம் முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா, கடந்த 16ம் தேதி கால்நாட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 19ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் காலையில் குற்றால தீர்த்தம் எடுத்து வருதல், மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது. இரவில் வாணவேடிக்கைகள் நடந்தது. கொடை விழாவான நேற்று முன்தினம் காலையில் கணபதிஹோமம், பால்குடம் ஊர்வலம், சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் தென்காசி கீழவாலிபன் பொத்தை திருநங்கை ஜோதி தலைமையிலான குழுவினரின் முளைப்பாரி வளர்த்தல் மற்றும் கிராமிய கும்மிபாட்டு நடந்தது.

மாலையில் பொங்கலிடுதல், பூப்பெட்டி ஊர்வலம், புஷ்பாஞ்சலி, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று காலையில் மஞ்சள்நீராடுதல், முளைப்பாரி கரைத்தல் நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டாமை நமச்சிவாயம், கணக்கர் பிரபாகர், முளைப்பாரிக்கான ஏற்பாடுகளை ராஜேஷ்குடும்பர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: