இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இலஞ்சி பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி

தென்காசி, ஏப். 25:  இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலஞ்சி பாரத்மாண்டிசோரி பள்ளி மாணவ, மாணவிகள் இலங்கை வரைபடம் போல அமர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

 கடந்த 21ம் தேதி காலையில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், படுகாயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டியும் நேற்று இப்பள்ளி மாணவ மாணவிகள் இலங்கை வரைபடம் போல ஒன்றிணைந்து இறைவனிடம் பிரார்த்தனை நடத்தினர்.

நிகழ்ச்சியில் மாணவி இனியலட்சுமி தாக்குதல் குறித்து பேசினார். மாணவி வீரமணி சாய் கவிதை வாசித்தார். பள்ளியின் தாளாளர் மோகனகிருஷ்ணன், முதன்மை முதல்வர் காந்திமதிமோகனகிருஷ்ணன், முதல்வர்கள் வனிதா, உஷாரமேஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: