திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதமடைந்த உரக்கிடங்கை இதுவரை சீரமைக்காத அவலம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 24: திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதமடைந்த உரக்கிடங்கு இதுவரை சீரமைக்கப்படவில்லை. திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் திருத்துறைப்பூண்டி வேதை சாலையிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இது சாலையோரத்தில் உள்ளதால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்ததையடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சி 6வது வார்டு வடபாதி ஆற்றங்கரை தெருவில் 2004ம் ஆண்டு நிலத்தை விலைக்கு வாங்கி அந்தபகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில் உரக்கிடங்கு அமைப்பதற்காக சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி, சாலை, பாலம் என பணிகள் ஏற்கனவெ முடிவுற்ற நிலையில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்பதற்காக ஷெட்டுகள் அமைக்கப்பட்டது. இதுவரை ரூ.4 கோடிக்கு மேல் செலவாகி விட்டது. இது பயன்பாட்டிற்கு வருவதற்குள் கஜா புயலில் முற்றிலும் சேதமடைந்து விட்டது. கஜா புயல் தாக்கி 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சீரமைப்பு பணி தொடங்கப்படவில்லை.எனவே பொதுமக்கள் நலன் கருதி கஜா புயலில் சேதடைந்த உரக்கிடங்கினை சீரமைத்திட வேண்டுமென்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: