தலைகுந்தா வனத்தில் கான்கிரீட் இருக்கைகள் சேதம்

ஊட்டி, ஏப். 24: ஊட்டி அருேகயுள்ள தலைகுந்தா பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர வசதியாக வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் இருக்கைகள் சேதமடைந்துள்ளது. இதனால் அமர இடம் இன்றி சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி அருகேயுள்ள நீர்காசிமந்து, தலைகுந்தா மற்றும் பைன் பாரஸ் போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள புல் மைதானங்களில் வனத்துறை சார்பில் கான்கிரீட்டால் ஆன இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் தற்போது தலைகுந்தா மற்றும் பைன்பாரஸ்ட் போன்ற பகுதிகளில் உள்ள கான்கிரீட் இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது.  இதனால், சுற்றுலா பயணிகள் புல் மைதானங்களிலேயே அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு இரவு நேரங்களில் சிலர் மது பாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தலைகுந்தா வனப்பகுதியில் உள்ள புல் மைதானங்களில் மீண்டும் கான்கிரீட்டால் ஆன இருக்கைகள் அமைத்து கொடுக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: