மாதம் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும் தேசிய திறனாய்வு போட்டியில் தெ.புதுக்கோட்டை மாணவி தேர்வு

மானாமதுரை, ஏப்.24: தேசிய திறனாய்வு தேர்வில் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ராமஜெயம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 48000 ஆயிரம் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தேர்வு கடந்த 2018 டிசம்பர் மாதம் நடைபெற்று தற்போது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மானாமதுரை வட்டாரத்தில் 24 நடுநிலைப்பள்ளிகள் 10க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகள், 6 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அவர்களில் தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் எம்.கே.என்.நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி ராமஜெயமும் தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி மற்றும் அவரது தாயாரை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கி வாழ் த்துக்கள் தெரிவித்தனர். இது குறித்து தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் கூறுகையில், இம்மாணவி இந்த கல்வி ஆண்டில் 100 சதவீதம் வருகை புரிந்து அதற்கான பாராட்டு கேடயமும் பெற்றுள்ளார். மேலும் பள்ளி ஆண்டு விழாவில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக இம்மாணவிக்கு சண்முகம் கமலாஅம்மாள் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை ரூ.5000 வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

Related Stories: