வேட்புமனு தாக்கல் செய்யும் தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதி இல்லை என குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம், ஏப். 24: வேட்புமனு தாக்கல் நடைபெறும் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என பலரும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 22ம் தேதி முதல் வேட்புமனுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அன்றைய தேதி முதல் வேட்பாளர் வேட்புமனுக்களையும் தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணத்திடம் தாக்கல் செய்கின்றனர்.இதுவரை 43 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக வேட்பாளர் உடன் முன் மொழிய வருபவர்கள் உட்கார நாற்காலி இல்லை எனவும், இருக்கும் ஒரு நாற்காலியும் கற்களால் முட்டுக்கொடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் குடிநீர் உள்ளிட்டவைகள் இல்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். வேட்புமனு தாக்கலால் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளதால் இ.சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். தாலுகா அலுவலக வளாகத்தில்தான் இ-சேவை மையம் செயல்படுகிறது. இங்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்களை போலீசார் வேட்புமனு தாக்கல் செய்யும் 11 மணி முதல் மூன்று மணி வரை உள்ளே அனுமதிப்பதில்லை எனவும் இதனால் இ-சேவை மையம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறுகின்றனர்.

Related Stories: