முசிறி, தா.பேட்டை பகுதிகளில் கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தா .பேட்டை , ஏப்.23:  முசிறி தா.பேட்டை, மேட்டுப்பாளையம் தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை வெயிலின் உக்கிரம் வாட்டி வதைத்து வருகிறது . சில தினங்களாக முசிறி தா.பேட்டை மேட்டுப்பாளையம் ,தும்பலம், சேருகுடி முத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மிதமான மழை பெய்தது .இதனால் நேற்று பகலில் வெயிலின் உக்கிரம் இருந்தாலும் பாதிப்பு தெரியவில்லை. நேற்று மாலை முசிறி தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்தது. தா.பேட்டை பகுதிகளில் பலத்த காற்றும் இடிமின்னலுடன் மழையும் பெய்தது. இதனால் சற்று நேரத்திற்கு மின்தடை ஏற்பட்டது. இந்த கோடை மழை குறித்து தார் பேட்டையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் கூறும்போது, கோடை வெயிலின் போது இரவு தூக்கத்தை தொலைத்து பகலிலும் வேலை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில் இந்த கோடை மழை சற்று ஆறுதலை அளித்துள்ளது என்று கூறினார்.

Advertising
Advertising

Related Stories: