கிறிஸ்டியன் கல்லூரி வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தி புதிய அறை திறப்பு விழா

பெரம்பலூர்,ஏப்.23: பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள கிறிஸ்டியன் கல்விநிறுவனங்கள் சார்பாக  தாளாளர் கிறிஸ்டோபர், செயலாளர் மித்ரா ஆகியோரது முயற்சியால் சேகரிக்கப்பட்ட 5000பிளாஸ்டிக் கழிவுகள் செங்கல்போல் சுவர்கள் அமை க்க பயன்படுத்தி 400சதுரஅடியில் புதியஅறைஒன்றினை கல்லூரிவளாகத்திற்கு உள் ளேயே அமைத்துள்ளனர்.இதன் திறப்புவிழா உலக பூமி தினமான நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. தாளாளர் கிறிஸ்டோபர் தலைமைவகித்தார். செயலாளர் மித்ரா முன்னிலை வகித்தார். இதில் சென்னையைசேர்ந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச்சேர்ந்த ஜியோடாமின் என்பவர் புதியக் கட் டிடத்தைத் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் டாக்டர் புவனேஷ்வரி, வளைகரங்கள் அமை ப்பின் நிர்வாகி அமராவதி மற்றும் கிறிஸ்டியன்கல்லூரி துறைத்தலைவர்கள், விரிவுரை யாளர்கள், மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.

Related Stories: