வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றி வைப்பு சாருபாலா அதிகாரிகளிடம் வாக்குவாதம்

திருவெறும்பூர், ஏப். 19:  திருச்சி மக்களவை தொகுதிக்குயில் திருச்சி மாநகராட்சியின் 64வது வார்டு பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 61வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்   பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மக்களவை கொகுதிக்குட்பட்ட   64வது வார்டின் திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 61வது வாக்குச்சாவடி பகவதிபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ளது. இந்த வாக்குசாவடியில் வாக்குப்பதிவு சின்னம் பொருத்திய இயந்திரம் மாற்றி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி அமமுக வேட்பாளர் சாருபாலாதொண்டைமானுக்கு அக்கட்சியினர் தகவல் கொடுத்தனர்.

Advertising
Advertising

அதன் அடிப்படையில் பகவதிபுரத்தில் உள்ள 61வது வாக்குச்சாவடிக்கு கட்சி நிர்வாகிகளுடன் மாலை 5.55 மணிக்கு வந்த சாருபாலா தொண்டைமான் வாக்குப்பதிவு அலுவலர் கமலா மற்றும் அகமதுநிஷாபேகத்திடம்  அவரது ஆதரவாளாகளுடன் கடும் வாக்குவதத்தில் ஈடுப்பட்டார். கமலாவும் அகமதுநிஷாபேகமும் அமமுக நிர்வாகிகளுக்கு  எவ்வளவோ எடுத்து சொல்ல முயன்றும் முடியவில்லை. இதனால் மன உலைச்சல் அடைந்த அலுவலர்கள் இருவரும் அடுத்தடுத்து வாக்குசாவடிக்குள் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வாக்குபதிவு நேரம் முடிந்த நிலையில் அமமுக வேட்பாளர் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் வாக்குசாவடியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாருபாலாதெமாண்டைமான் மற்றும் அமமுக தொண்டர்களை வாக்கசாவடியை விட்டு வெளியில் வந்து எதுவானாலும் பேசுங்கள் வாக்குப்பதிவு நேரம் முடிந்தும் வாக்குசாவடிக்குள் நீங்கள் இருக்க கூடாது என்று கூறி மற்ற கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டதோடு பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை , ஏஎஸ்பி பிரவீன்உமேஷ்டோங்ரே தலைமையிலான மத்திய ராணுவ படையினர் மற்றும் போலீசார்  விரைந்து வந்தனர்.  அப்போதும் அனைத்து கட்சி நிர்வாகிகள் அமமுக நிர்வாகிகளை வாக்குச்சாவடியை விட்டு வெளியில் வரும்படி கோஷமிடடனர். அவர்களை மத்திய ராணுவ படையினருடன் போலீசார் சேர்ந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியில் தள்ளினர்.  

இந்நிலையில் சாருபாலாதொண்டைமான் வாக்குச்சாவடியில் அமர்ந்து வெளியில் வராமல் தர்ணாவில் ஈடுப்பட்டார். அவரிடம் திருவெறும்பூர் தாசில்தார் மற்றும் போலீசார் சமரசம் பேசியதை தொடர்ந்து  சாருபாலா வாக்குசாவடியை விட்டு வெளியில் வந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கிருஷ்டி வந்தார். அதனைத் தொடர்ந்து அவரிடம்  61வது வாக்குசாவடிக்கு மறுதேர்தல் நடத்தவேண்டுமென சாருபாலா தொண்டைமான் கோரிக்கை வைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

Related Stories: