கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் சித்திரை ஏகதின தீர்த்தோற்சவம்

கீழ்வேளூர், ஏப்.18:  நாகை மாவட்டம் கீழ்வேளூர் அட்சயலிங்கசுவாமி கோயில் சித்திரை ஏகதின தீர்த்தோற்சவம் நேற்று 17ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று (18ம் தேதி) பஞ்சமூர்த்திகள் படியிறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை  ஓலை சப்பரத்தில் சுவாமிகள் விதி உலா காட்சி நடைபெறுகிறது.  அதைத் தொடர்ந்து கிழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு பல்லாக்கில்  கல்யாணசுந்தரர், அம்பாள், இந்திரன் சுவாமிகள் வீதி உலாக காட்சி நடைபெறுகிறது. இந்த சுவாமிகள் 7 ஊர்களில் உள்ள  கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் இருந்து புறப்படும் சுவாமிகள் கீழ்வேளூர் மேலஅக்ரஹாரம், அகரக்கடம்பனூர் ராமசாமி பொருமாள் கோயில், கோயில் கடம்பனூர் கைலாசநாதர் கோயில், திருக்கண்ணங்குடி காளஹஸ்தீஸ்வரா கோயில்,  பட்டமங்கலம் காசிவிஸ்வநாதர்கோயில், அபிமுக்தீவரர்கோயில்,  வடக்காலத்தூர் சிதம்பரேஸ்வரர்-சிவகாமி கோயில், தேவூர் தேவபூரிஸ்வரர் கோயில், இலுப்பூர் சிதம்பரேஸ்வரர் கோயில், கூத்ர் கைலாசநாதர் மற்றும் ஓம்பிரகாச விநாயகர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று அங்கு கோயில் சார்பில் பட்டு சாத்தி பூஜை செய்யப்படுகிறது. விழாவை முன்னிட்டு ஏழு ஊர்களிலும் பக்தர்கள் சுவாமிக்கு பட்டு சாத்தி அர்ச்சனை செய்வார்கள்.  35 ஆண்டுகளாக  7 ஊர் சுவாமி ஊர்வலம் தடைபட்டிருந்த நிலையில் தற்போது 3வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories: