பண்டாரவாடை பகுதியில் தெருக்களில் குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம்

பாபநாசம், ஏப். 18: பண்டாரவாடை பகுதியில் உள்ள தெருக்களில குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றாததால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பல தெருக்களில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை. இதனால் தெருக்களில் வசிப்பவர்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டு விடுகின்றனர். இந்த குப்பைகளை தினம்தோறும் அகற்றப்படுவதில்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே குப்பைகள் சிதறி கிடக்கிறது. பண்டாரவாடை ஊராட்சி அலுவலகம் அருகே குப்பை தொட்டிகள் புதிதாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டிகளை தெருக்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: