சங்கரா பல்கலைக்கழகத்தில் மகப்பேறுக்கு முந்தைய நிலை கல்வி தேசிய கருத்தரங்கம்

காஞ்சிபுரம், ஏப்.18: காஞ்சிபுரம் இடுத்த ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீசங்கரா பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத இந்திய பண்பாட்டு துறை, புதுச்சேரி ஸ்ரீஅரவிந்த இந்திய பண்பாட்டு அறக்கட்டளை இணைந்து இந்திய பண்பாட்டின் பார்வையில் மகப்பேறுக்கு முந்தைய நிலை கல்வி எனும் 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. சங்கரா பல்கலைக்கழக துணைவேந்தர் விஷ்ணுபோத்தி தலைமை தாங்கினார். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், சமஸ்கிருத துறை தலைவருமான டாக்டர் தேபஜ்யோதி ஜேனா வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசு முன்னிலை வகித்தார்.

தொடக்க விழாவில் ஒடிசா மாநிலம், கட்டாக்கில் அமைந்துள்ள ஜகத்குரு கிருபாலு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.ராமரத்தினம்,  பெங்களூரு, எஸ் வியாசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமச்சந்திர பட்ட கொடேமனி, பெங்களூரு சாந்தி தாம்மை சேர்ந்த ஆரியமணி ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கின் மதிப்பீட்டில் சிறப்புரை நிகழ்த்தினார்.

சமஸ்கிருதம் மற்றும் இந்திய பண்பாட்டுத்துறையின் புலத் தலைவர் ராமகிருஷ்ண பிசிபாடி, ஸ்ரீஅரவிந்த இந்திய பண்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் சம்பதானந்த மிஸ்ரா ஆகியோர் கருத்தரங்கினை வாழ்த்தி பேசினர். எஸ்ஏஎப்ஐசி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பேலோ மேஹரா கருத்தரங்கின் நிகழ்வறிக்கையை சமர்ப்பித்து பேசினார். அசாம், சத்தீஷ்கர், ஒடிஸா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழகம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும், மருத்துவர்களும், மாணவர்களும் பங்கேற்று, தங்களது ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.

இக்கருத்தரங்கில் மகப்பேறு முந்தைய நிலை கல்வி சம்பந்தப்பட்ட யோகம், மருத்துவம், ஆயுர்வேதம், வேதம், மனோநலம் சார்ந்த ஆய்வு கட்டுரைகள் பதிவிடப்பட்டன. கருத்தரங்கையொட்டி மருத்துவர் என்.கல்யாணி தலைமையில் மாதவிடாய் சமயத்தில் உடல்நலம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கலாசார உணர்திறன் உருவாக்குதல் எனும் தலைப்பில் பயிற்சி பட்டறையும், மருத்துவர் பி.ராம் மனோகர் தலைமையில் கருவுற்றல், கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்பு ஆகியவற்றின் ஆன்மீக பரிமாணங்கள் - ஆயுர்வேத பார்வை எனும் தலைப்பில் சிறப்பு அமர்வும் நடத்தப்பட்டது.

Related Stories: