திருமங்கலம், ஏப். 17: திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர் ஒரே நேரத்தில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி திருமங்கலம் தெற்குதெருவில் உள்ள காந்திசிலையில் இருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். இதில், அதிமுக நகரசெயலாளர் விஜயன், தேமுதிக நகரச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கூட்டணி கட்சியினர் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வந்தனர். விருதுநகர் ரோடு, மதுரை ரோடு, பஸ்ஸ்டாண்ட் வழியாக ராஜாஜிசிலையை அடைந்தனர்.