மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் நாளை மூடல்

சேலம், ஏப்.16:  மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மாநகரப்பகுதிகளில் நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை (17ம் தேதி) செயல்படக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து, இறைச்சி கடைகளை நாளை மூட வேண்டும். மேலும், அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் மூலம் 4 மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும். அப்போது, அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: