திருவிடைமருதூர் பகுதியில் மயிலாடுதுறை திமுக வேட்பாளர் ராமலிங்கம் வாக்கு சேகரிப்பு

நாகை, ஏப். 12: மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ராமலிங்கம் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2 வாரமாக தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருவிடைமருதூர் கடைவீதியில் துவங்கி சீனிவாசநல்லுார் வரையிலான 29 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் ராமலிங்கம் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் பேசுகையில், இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்தது குறித்து ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. மத்திய பாதுகாப்பு துறையின் ஆட்சேபனைகளை புறந்தள்ளியும், பிரதமர் அலுவலகம் நேரடியாக இவ்விவகாரத்தில் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டது குறித்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மீதும் விரிவான விசாரணை நடத்துவோம்.

மாநில முதல்வர் உட்பட அனைத்து அரசு பதவிகளில் இருப்பவர்கள் மீது சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிப்பதற்கு லோக்பால் நியமனம் திமுக ஆட்சியில் தான் முதன்முறையாக கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்டது. ஊழலை களையெடுப்பதற்கு வலிமையான சட்ட செயல்பாடுகளை விரைவாக கொண்டு வருவதில் திமுக உறுதியாக உள்ளது என்றார்.மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை அன்பழகன், கோவிசெழியன் மற்றும்

பலர் உடன் சென்றனர்.

Related Stories: