பொங்கல் திருவிழா

சாயல்குடி, ஏப். 9: கிடாத்திருக்கை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடந்தது. முதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி மாத வருடாந்திர பொங்கல் திருவிழா கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது, அம்மனுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர். திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் போன்ற நிகழச்சிகள் நடந்தது. உற்சவ அம்மன் தேர் வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: