ஆலத்தூர் தாலுகா பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

பாடாலூர், ஏப். 9:  ஆலத்தூர் தாலுகா பகுதியில் விவசாய பொருட்கள் தொடர்பான தொழிற்சாலை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்தார். ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களான மருதடி, விஜயகோபாலபுரம் நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், இரூர், திருவிளக்குறிச்சி, நாட்டார்மங்கலம், கூத்தனூர், மாவிலங்கை, குரூர், டி.களத்தூர், நக்கசேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரம்பலூர் மக்களவை தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலம்,  பெரம்பலூர் மாவட்டத்தின் கனவு திட்டமான ரயில் பாதை திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பகுதியில் செயல்படும் நடுநிலைப் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.  மக்கள் பிரச்னைகளை தீர்க்க எந்த ஒரு பெரிய திட்டமாக இருந்தாலும் அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் விவசாய விளைப் பொருட்களுக்கு குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தி தருவேன். வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் விவசாய பொருட்கள் தொடர்பான தொழிற்சாலை கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பெரம்பலூர் வளர்ச்சிக்காக அரசு  மருத்துவக் கல்லூரி மற்றும் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் கொண்டு வருவேன். மேலும் மக்கள் கஷ்டங்களை அறிந்த திமுக விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி, இளைஞர்கள், பெண்களுக்கு வேலை வாய்ப்பு என பல நல்ல திட்டங்களை செயல்படுத்த உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: