எட்டாமடை தேவி  முத்தாரம்மன் கோயில் திருவிழா

நாகர்கோவில், ஏப். 9 :  எட்டாமடை இந்து நாடார் சமுதாயம் தேவி  முத்தாரம்மன் கோயில்  139 ம் ஆண்டு ெகாடைவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2ம் தேதி பந்தல்கால் நடுதல், தேவி நாம லட்சார்ச்சனை ஆகியவை நடந்தது. 3ம்தேதி இந்து சமய சொற்பொழிவு நடந்தது. 4ம் தேதி தேவியர் மாநாடு நடந்தது. 5ம்தேதி 508 திருவிளக்கு பூஜை நடந்தது. 6ம்தேதிசமய வகுப்பு ஆண்டுவிழா, 7ம் தேதி பகவத் கீதை பாராயணம் நடந்தது. இதனை யோகேஸ்வரி மாதாஜி நடத்தினார். மாலையில்  பொன்னு விநாயகர் கோயிலுக்கு அபிஷேக கும்பம் எடுத்து வருதல் ஆகியவை நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு  பொன்னு விநாயகருக்கு தீபாராதனை, இரவு 11 மணிக்கு தர்ம சாஸ்தாவுக்கு தீபாராதனை ஆகியவை நடந்தது.  இன்று(9ம் தேதி) மதியம் 12 மணிக்கு தேவி   முத்தாரம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு சாமிகள் வீதிஉலா வருதல், 1 மணிக்கு அன்னதானம், மாலை 7 மணிக்கு மாலைநேர தீபாராதனையுடன் மஞ்சள் நீராடுதல், இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. நாளை(10ம் தேதி) காலை 7 மணிக்கு தேவி  முத்தாரம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பொங்கல் வழிபாடுடன் அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் கோயில் சேவை அமைப்புகள் செய்துள்ளனர்.

Related Stories: