மீனவரை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் எஸ்பியிடம் கோரிக்கை

நாகர்கோவில், மே 17: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் மாவட்டகுழு உறுப்பினர் மேரிஸ்டெல்லா, ஜெயன், நாகர்கோவில் நகர செயலாளர் பெனில் ஆகியோர் நேற்று எஸ்பியிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முட்டத்தைச் சேர்ந்தவர் வறீதையா. மீனவரான இவர் எங்களது கட்சி குளச்சல் வட்டார செயலாளராக உள்ளார். அந்தப் பகுதியை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த ஏப்ரல் 14ம் தேதி மதியம் 1 மணி அளவில் வறீதையாவை தாக்க முயன்றனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தததால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த 9ம் தேதி மதியம் 12 மணிக்கு வறீதையாவை தாக்க வந்தனர். அவரது மனைவியை தகாதவார்த்தையால் திட்டியோதோடு, வறீதையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர். இது தொடர்பாக வறீதையா வெள்ளிச்சந்தை காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வறீதையா மற்றும் அவரது மனைவி அச்சத்தில் உள்ளனர். எனவே வறீதையா கொடுத்த புகாரின் மீது வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குபதிவு செய்து எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மீனவரை தாக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் எஸ்பியிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: