ஆணூர் அம்மன் கோயில் பொங்கல் தேர்திருவிழா

காங்கயம்,ஏப்.7: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஆணூர் அம்மன் கோயில் பொங்கல் தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் தேர்வடம் பிடித்தனர்.கடந்த மாதம் 29ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 4ம் தேதி காவடி தீர்த்தம் எடுத்தல் நடைபெற்றது. 5ம் தேதி அத்தனூர் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 6 மணியளவில் தேர்நிலை பெயர்தலில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கலந்து தேர் வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து 7 மணியளவில் தீர்த்த அபிஷேகம்மும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். மாலை 5 மணிக்கு தேர்நிலையை அடைந்தது. இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

Related Stories: