லால்குடி, ஏப். 3: லால்குடி தொகுதியில் பெரம்பலூர் தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரி வேந்தர் தீவிர வாக்குகள் சேகரித்தார். பெரம்பலூர் மக்களவை தொகுதி ஐஜேகே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்து லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடி ஒன்றியம் தாளக்குடி கிராம த்தில் வாக்கு சேகரித்தார். அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது: லால்குடி ஒன்றிய பகுதியான இந்த பகுதி தான் திமுகவுக்கு அதிக வாக்குகள் பெற்று தரும் பகுதி. இந்த பகுதியில் நான் வேட்பாளரக நின்ற போது அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்தீர்கள். தற்போது டாக்டர் பாரிவேந்தர் பச்சமுத்துவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார். அதனை தொடர்ந்து மேலவாளாடி, பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, இடையாற்று மங்கலம் பெரியவர்சீலி, சாத்தமங்கலம், அன்பில், செங்கரையூர், கல்விக்குடி, ஆலங்குடி மகாஜனம், நத்தம், கோமாக்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட் பாளர் டாக்டர் பாரிவேந்தர் வாக்கு சேகரித்து பேசியதாவது: லால்குடி தொகுதி மிகவும் பிற்படுத்தபட்ட பகுதியாகும். விவசாயம் சார்ந்த பகுதி.