கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகன பேரணி

ஜெயங்கொண்டம், ஏப். 3: ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி காவல்துறை, பொதுமக்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரணியை உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு பதாகைகளை இருசக்கர வாகனத்தில் பொருத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து கங்கைகொண்டசோழபுரத்தில் துவங்கி இளையபெருமாள்நல்லூர் தேர்வடம் வழியாக மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் குறுக்குரோட்டில் பேரணி நிறைவடைந்தது.

மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி, ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கென்னடி ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அவ்வழியாக சென்ற பேருந்து, கார், வேன், பைக்கில் சென்றவர்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாசில்தார்கள் ஆண்டிமடம், ராஜமூர்த்தி, கோவிந்தராஜ், துணை தாசில்தார்கள் மீனா, சம்பத் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், மலைச்சாமி, சந்திரகலா, போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். தாசில்தார் குமரய்யா வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் சரண்யா நன்றி கூறினார்.

Related Stories: